தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது: “,தேனி மாவட்டத்தில் உள்ள பொட்டிப்புரம் கிராமத்தில் இந்திய அடிப்படையிலான நியூட்ரினோ ஆய்வகத்தை (INO) அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு கடந்த 17.06.2021 தேதியிட்ட குறிப்பாணையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு குறிப்பிட்ட கோரிக்கையை விடுத்திருந்ததை உங்கள் கவனத்திற்கு அழைக்க விரும்புகிறேன். இப்பகுதியின் வளமான வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதில் […]