பாங்காக் : தாய்லாந்து – கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது, அவ்வப்போது மோதலும் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்று முதல் இருநாடுகள் இடையேயான மோதல் வலுவடைந்து போராக மாறி உள்ளது. இருநாடுகளின் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் பதற்றம் இன்னும் தணியவில்லை. சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இரண்டாவது நாளாக மோதல்கள் தொடர்ந்துள்ளன. இதனால், தாய்லாந்து நாட்டின் எல்லையோர பகுதிகளில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கம்போடியா ராணுவத்திற்கு எதிராக […]