சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின்போது அவரை போலீசார் கடுமையாக பிரம்பால் தாக்கியதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், சீருடை அணியாத காவலர்கள் அஜித் குமாரை கம்பத்தில் கட்டி, கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. […]