பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் ‘சிக்ஷா நியாய் சம்வாத்’ என்ற திட்டத்தை ராகுல் காந்தி தொடங்கி வைத்து, கட்சியின் மாநில அளவிலான பொதுக்கூட்ட நிகழ்வில் மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது, இதையடுத்து, காரிலிருந்து இறங்கி வீதியில் நடந்தே சென்று சந்தித்தார். பின்னர், நிதிஷ் குமார் அரசாங்கத்தை கடுமையாக […]
‘சைக்கிள் பெண்’ என்றழைக்கப்பட்ட ஜோதி என்பவரின் தந்தை மாரடைப்பு காரணமாக காலமானார். மோகன் என்பவர் டெல்லியில் பல ஆண்டுகளாக ரிக்ஷா வண்டி ஓட்டி வந்தார்.இதற்கிடையில்,கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு போடப்பட்டதை தொடர்ந்து தனது ரிக்ஷாவை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பின்னர் அவர் வேலையில்லாமல் இருந்தார்.முன்னதாக அவர் காலில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது 16 வயது மகளான ஜோதி,தனது தந்தையை கவனித்துக்கொள்வதற்காக டெல்லிக்கு சென்றார்.கடுமையான பணப் பற்றாக்குறையை எதிர்கொண்ட ஜோதி மற்றும் […]