பஞ்சாப் : அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, |அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நேற்றிரவு தரையிறங்கியது. அமெரிக்க விமானப்படையின் C-17 A குளோப்மாஸ்டர் விமானத்தில் 112 பேர் வந்துள்ளனர். இவர்களில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மற்றும் 31 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் இருந்து தங்கள் மாநிலத்தவர்களை வால்வோ பேருந்தில் ஹரியானா பாஜக அரசு, அழைத்துச் சென்றுள்ளது. முன்னதாக, 119 இந்தியர்கள் கொண்ட […]
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனென்றால், பஞ்சாபின் அமிர்தசரஸில் அமெரிக்க ராணுவ விமானத்தில் அழைத்துவரப்பட்ட, அவர்கள் கைகள் மற்றும் கால்களில் விலங்குகள் அணிவிக்கப்பட்டு விமானத்தில் பயணம் செய்யப்பட்டதாகவும் அதற்கான புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே விலங்கு அவிழ்க்கப்பட்டது தெரியவந்துள்ளது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரான ஜஸ்பால் சிங் தனியார் ஊடகத்திற்கு பேட்டியும் கொடுத்திருந்தார். […]
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கொண்டுவரப்பட்ட இந்த விமானம் நேற்று பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால், தலைநகர் டெல்லிக்கு பதிலாக பஞ்சாபில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி வருகின்றன. மத்திய அரசு இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை […]