டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இந்த கள்ளநோட்டுகள் ஏற்கனவே சந்தையில் புழக்கத்திற்கு வந்து விட்டதாகவும், வங்கிகள், செபி, CBI, NIA உள்ளிட்ட அமைப்புகள் விழிப்புடன் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகள் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால், அவற்றைக் கண்டறிவது கடினமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சிறிய வேறுபாடுகளைக் கவனிப்பதன் மூலம் இந்தப் போலி ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண முடியும் […]