சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) தற்போது வெகுவாக குறைந்து சென்னையை விட்டு விலகி மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. மழையின் அளவு குறைந்தாலும் இன்னும் தேங்கிய மழைநீர் வடியாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் இன்றும் சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல்.! பொது போக்குவரத்து ரத்து… பொது தேர்வுகள் ரத்து… உதவி எண்கள் இதோ… சென்னையை நெருங்கி இருந்த […]
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. கனமழை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் சென்னையே வெள்ளக்காடாக மிதக்கிறது. அதே சமயம் மிக்ஜாம் புயல் எதிரொலியால் கனமழை பெய்யும் என்பதால் , சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் […]