சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பொத்தூரில் உள்ள வள்ளலார் நினைவிடத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர். அதில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நினைவிடம் வந்தடைந்த பின், […]
புதிய கட்சியை தொடங்கினார் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய குலாம் நபி ஆசாத், “ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். ஜம்முவில், குலாம் நபி ஆசாத் தனது புதிய ஜனநாயக ஆசாத் கட்சியின் கொடியையும் வெளியிட்டார். கடுகு நிறம் (Mustard colour) படைப்பாற்றல் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையையும், வெள்ளை அமைதியையும், நீலம் நிறம் சுதந்திரம், திறந்தவெளி, கற்பனை மற்றும் […]
புதிய கட்சிகள் தொடங்க 30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், அதனை 7 நாட்களாக குறைத்தது இந்திய தேர்தல் ஆணையம். புதிய கட்சியை பதிவு செய்ய 30 நாட்கள் தேவை என்ற அவகாசத்தை 7 நாட்களாக குறைத்தது இந்திய தேர்தல் ஆணையம். இந்த உத்தரவு தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு மட்டும் பொருந்தும் எனவும் விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் தொடர்பான பொது அறிவிப்பை வெளியிட கட்சிகள் இனி 30 நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. கட்சி […]
சீமானின் நாம் தமிழர் கட்சியில் இதுவரை இருந்த மன்சூர் அலிகான் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார். சீமானின் நாம் தமிழர் கட்சியில் இதுவரை இருந்த மன்சூர் அலிகான், இன்று தனது கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும் தனது அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனி கட்சியை […]