தமிழகத்தில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து 2018-ல் உத்தரவிட்ட நிலையில், அன்றாட பயன்படுத்தப்படும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பால் உள்ளிட்டு பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த விதிவிலக்கும் அரசாணை மூலம் திரும்பப் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் […]
கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை என மாநகராட்சி எச்சரிக்கை. கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பராமரிக்கப்படும் 3 இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலை, மாலை என இரு வேளைகளில் […]
பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளை உற்பத்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முதலில்ஆவின்பால் பாக்கெட்டில் இருந்து தொடங்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். உணவுப்பொருட்களை அடைக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கும் தடை விதிக்க பரிந்துரை செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.