அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் முதலைமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விளக்கம் அளித்து வந்தார்.அப்போது முதல்வர் கூறுகையில்: “மாநிலத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் உள்ள வேலை உறுதித்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணிக்கு விருப்பம் தெரிவிக்க கூடிய முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்த பணி வழங்க வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள […]