குஜராத் : ஐ.பி.எல். 2025 சீசனில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜி.டி.) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ.) இடையிலான போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. அது என்னவென்றால், இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோருக்கும் இடையே 15-வது ஓவரில் ஒரு சூடான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மும்பை இந்தியன்ஸ் அணி […]
சென்னை : சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என சாய் கிஷோர் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். இந்தியாவின் இளம் வீரரும், ஆல் ரவுண்டரான சாய் கிஷோர் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டி20 போட்டிகளில் பவர்பிளே, மிடில் ஓவர்ஸ் மற்றும் டெத் ஓவர்களில் கூட சிறப்பாகப் பந்து வீசி குஜராத் அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். ஒரு சிறந்த சுழற் பந்து வீச்சைத் தாண்டி, பேட்டிங்கிலும் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டால் தனது நங்குர ஆட்டத்தால் அணிக்குப் பக்கபலமாக பேட்டிங்கிலும் திகழ்ந்துள்ளார். ஐபிஎல் தொடர்களையும் தாண்டி உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையிலும் தமிழ்நாடு அணிக்காகச் சிறப்பாக விளையாடியும் இருக்கிறார். கடந்த 2023-2024 ஆண்டிற்கான ரஞ்சி ட்ராபி தொடரில் சிறப்பாக விளையாடி தமிழக அணியை அரை இறுதி வரை கொண்டு […]