சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு. சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 ஆவது படங்கள் உருவாகிறது. இந்நிலையில், நாளை நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என […]
சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 40 ஆவது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 ஆவது படங்கள் உருவாகிறது. இந்நிலையில் தற்போது சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக சன் […]
வாடிவாசல் படத்தை பார்க்க காத்திருக்கிறேன் என்று இயக்குனர் அல்போன்ஸ் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா […]
சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுக்கு நடிகர் சூர்யா,”சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காகத்தான் அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல” எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து,நீட்தேர்வு, குடியுரிமை திருத்த சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்றிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில்,ஒளிப்பதிவு […]
சட்டம் கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக தான் சட்டம், அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு திருத்த மசோதா நிலைகுழுவிற்கு அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இது குறித்து தனது அறிக்கையை நிலைக்குழு சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த திருத்த சட்டத்தில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்று வந்தாலும், நான்காவதாக இடம் […]
ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிடம், நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து வரும் ஜூன் 23-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என நடிகர் சூர்யா கேட்டுக்கொண்டுள்ளார். நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ‘கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி […]
ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்த ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 250 பேருக்கு தலா ரூ.5,000 வழங்கி உதவிய நடிகர் சூர்யா. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ஜூன் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பலர் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றார்கள். இதனால் ஏழை மக்களுக்கு தமிழக அரசு, திரையுலக பிரபலங்கள், தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவித்த தனது ரசிகர் […]
சூர்யா, கார்த்தி அவர்களது தந்தை சிவக்குமார் ஆகியோர் இனைந்து 1 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் முக.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் […]
நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இதனையடுத்து, நடிகர் விவேக்கின் பூத உடலுக்கு பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி […]
தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் […]
நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் நடிக்க உள்ள நிலையில், அவருக்கு படத்திலும் அருண் விஜய் தந்தையாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சரண் சண்முகம் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் அவர்கள் நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் தந்தையாக நடிப்பதற்கு பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அது சரி வராத […]
நடிகர் சூர்யா அவர்கள் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா தமிழில் நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் […]
தமிழ் திரையுலகில் நயன்தாரா போல வளம் வர வேண்டும் எனவும், விக்ரமுடன் நடிக்க ஆசை எனவும் சூரரை போற்று பட நடிகை அபர்ணா கூறியுள்ளார். தமிழில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வெளிவர இருக்கும் திரைப்படம் தான் சூராரை போற்று. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்திருந்தார். படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், அவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணாவும் நடித்துள்ளார். படத்திலிருந்து காட்டு பயலே எனும் பாடல் மட்டும் வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில், படம் […]
ரசிகர் ஒருவர் அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க சூரரைப்போற்று படத்தை விரைவில் வெளியிடுமாறு அமேசானிடம் வேண்டுகோள் விடுத்த நிகழ்வு நடந்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று படபிடிப்பு முடிந்து அமேசான் ப்ரைமில் வெளியாக தயார் நிலையில் இருந்த போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் பட வெளியாகாது என்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் இது குறித்து நடிகர் சூர்யாவும் படம் வெளியாகுவது தள்ளிப்போவதால் தாமத்திற்கு மன்னக்கவும் ,ரசிகர்கள் பொறுமை காக்கவும் […]
அட ஜில்லுனு ஒரு காதல் அய்ஷு குட்டியின் அண்மை புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது. தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான காதல் திரைப்படங்கள் ஒன்றுதான் ஜில்லுனு ஒரு காதல். இந்த படத்தில் குட்டி தேவதையாக ஜோதிகா மற்றும் சூர்யாவுக்கு மகளாக நடித்தவர் தான் ஸ்ரேயா சர்மா. அந்த படத்தில் இவரை குட்டி அய்ஷு எனும் பெயருடன் நடித்திருந்தார். இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர் தற்பொழுது சில படங்களில் நடித்து வரும் நிலையில், தனது இளமை தோற்றத்தில் […]
நடிகர் சூர்யாவின் சென்னை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல். தமிழ் திரையுலகின் மிக பிரபலமான நடிகராக வலம் வரக்கூடிய நடிகர் சூர்யாவிற்கு பல்வேறு மாவட்டங்களிலும் நடிகர் சங்கங்கள் மற்றும் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் இயங்கி வரக்கூடிய சூர்யாவின் அலுவலகத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர்கள் போன் செய்து மிரட்டியுள்ளனர். இந்த மிரட்டலை அடுத்து மோப்ப நாயுடன் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் அந்த அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். […]
நீட் தேர்வுக்கு முந்தைய நாள் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையை பலர் வரவேற்றனர். அதே நேரத்தில் பலர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என நீதிபதி சுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். சட்டசபையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் […]
நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நல்ல எண்ணத்தில் தான் நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் எனவும் கூறினார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் திமுக தான் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே, நாடு முழுவதும் நீட் தேர்வு […]
தமிழகத்தில் நேற்றுமுன் தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா நேற்று இரவு அறிக்கை வெளியிட்டார். அதில், நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதுல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் […]
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களின் படத்திற்கும் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அதன்படி, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அடுத்து, ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தை சன் நெக்ஸ்ட் OTT தளம் வாங்கியுள்ளதாம். கே.இ.ஞானவேல் ராஜா […]