சென்னை : இன்று (பிப்ரவரி 11) தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் முருக பக்தர்கள் லட்சக்கணக்கானோர் தரிசனத்திற்காக குவிந்துள்ளனர். பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாகவும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர். மதுரை மாவட்டம் கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மைதானத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் […]
திண்டுக்கல் : இந்து கடவுள் முருக பெருமானுக்கு முதன்மையாக கொண்டாடப்படும் விழாக்களில் முக்கிய நிகழ்வாக உள்ள தைப்பூசத் திருவிழா ஆண்டு தோறும் தமிழ் மாதமான தை மாத பௌரணமியை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆலோசனை கூட்டம் : அதிலும் குறிப்பாக அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா பிரசித்திபெற்றது. தற்போதே பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் அதிகமானோர் தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவின் […]