சென்னை : தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு என்பது பற்றிய அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வின் நிலவரம் : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (07-12-2024) காலை 0830 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு […]
சென்னை: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் இன்று (டிச.6) மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, நாளை டிச.7-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 12 -ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக டிச.11 மற்றும் 12ம் தேதிகளில் டெல்டா […]
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 11-ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான […]
சென்னை: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், அதற்கான பட்டியலையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, புதுக்கோட்டை, […]
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை (டிசம்பர் 05) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல 6 முதல் 10- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் […]
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி அமோக வெற்றிப் பெற்றுள்ளது. இதன் மூலம் இலங்கை அரசியல் வரலாற்றில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வரலாறு படைத்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ரூ.400 கோடி ஊழல் செய்ததாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுநிலை வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நேற்று முதலே பல்வேறு இடங்களில் கனமழையால் மழைநீர் தேங்கி இருந்தது. அதனை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அதே போல பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. மேலும், இது தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை அதிகாலை இது நெல்லூர் அருகே கரையைக் கடக்கும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் இன்று […]
சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று காலை 5.30 மணி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை […]
சென்னை : வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், கனமழை எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பங்கேற்னர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், “ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள். ஆதரவற்றோர் […]
சென்னை : தமிழநாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வங்கக்கடலில் உருவானது என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் அதனால் சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கடற்கரை பகுதியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து […]
சென்னை : தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இதன் […]
சென்னை : தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் படிப்படியாக மழையின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. […]
சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தமிழக உள் பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடலிலும் தலா 1 வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இன்று உருவான அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி 48 மணி நேரத்தில் நகரும் என்றும் கூறியுள்ளது. […]
சென்னை : லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (10-10-2024) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரேபிக் கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய […]
சென்னை : லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, வரும் 7 நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது பற்றிய விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று ( 09.10.2024) : தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது […]
சென்னை : லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, […]
சென்னை : லட்சத்தீவு, கேரளா மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும், சில மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, (இன்று) 08.10.2024, மற்றும் நாளை (09.10.2024:) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பே சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, வானிலை மையம் அடுத்தடுத்த நாட்களுக்கான வானிலை குறித்த தகவல்களை அறிவித்துக்கொண்டு வருகிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி ஆரஞ்சு எச்சரிக்கையை கொடுத்துள்ளது. மேலும், தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதே சமயம், செப்டம்பர் 07 : நெல்லை, தென்காசி, […]
சென்னை : தெற்கு ஆந்திரா வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு-தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (பிற்பகல் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் […]