தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பண பலன்களை வழங்குதல், அகவிலைப்படி உயர்வை வழங்குதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பொதுமக்கள் அவதியில் உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்படும் […]
ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பண பலன்களை வழங்குதல், அகவிலைப்படியை வழங்குதல் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தன. இதனால், பேருந்து சேவை பாதிக்கப்படும் என கருத்தில் கொண்டு, கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது. இருப்பினும், அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதன்படி, நேற்று நள்ளிரவு […]
மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் பல்வேறு தினங்களில் நடந்த ஆய்வு அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ குழுவினர் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் ஊரடங்கு நீட்டிப்பு என அறிவித்தார். இதனால் நேற்று ஐந்து மாதத்திற்கு பிறகு மாவட்டத்திற்குள்ளான பேருந்து சேவை தொடங்கியது. மேலும், சென்னையில் பெரு […]
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி கட்டணம் தொடர்பாக பெற்றோர்களை கட்டாயப்படுத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் பள்ளிகள் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வு பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு குறித்து முதல்வர் பழனிசாமி நடவடிக்கை […]