உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைக்கிறார். தற்பொழுது, துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்க சிறப்பு விமானம் மூலம் ஜெகதீப் தன்கர் கோவை வருகிறார். இந்த நிலையில், உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிப்பதாக அறிவித்த சில நிமிடங்களில், தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்களும் புறக்கணிப்பாதக அறிவித்துள்ளனர். அதன்படி, மனோன்மணியம் […]
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு ஆளுநர் மாளிகை செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறிக்கும் மசோதா அண்மையில் சட்டமான நிலையில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரை அழைத்து துணைவேந்தர்கள் மாநாடு நடத்துகிறார் ஆர்.என்.ரவி. இதில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், 4ஆம் ஆண்டாக […]