வருடத்திற்கு ரூ. 999 சந்தா…ஹாட்ஸ்டாரை ஓரம் கட்ட ‘ஜியோ சினிமா’ எடுத்த அதிரடி முடிவு.!!

Published by
பால முருகன்

கொரோனா  காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஓடிடி  தளங்களில் படங்கள், சீரியஸ்கள்,நிகழ்ச்சிகள், பார்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் , ஜீ 5 ஆகிய ஓடிடி தளங்கள் மிகவும் பிரபலமானது. ஆனால் இந்த ஓடிடி தளங்களை அம்பானியின் ஸ்ட்ரீமிங் தளமான ஜியோசினிமா மிஞ்சிவிட்டது என்றே கூறலாம்.  ஏனென்றால், ஜியோ சினிமா நடப்பாண்டடு ஐபிஎல் தொடரை அனைவரும் பார்க்கும்படி இலவசமாகவே ஒளிபரப்பு செய்தது.

இதற்கு முன்னதாக ஹாட்ஸ்டார் நிறுவனம் மாதம் 150 ரூபாய் சந்தா செலுத்தி ஐபிஎல் பார்க்கும் உரிமையை பெற்றிருந்தது. ஆனால், இதனை ஜியோ சினிமா மாதம் சந்தா செலுத்தாமலேயே இலவசமாக ஐபிஎல் போட்டியை பார்க்கலாம் எனும் வசதியை கொண்டு வந்தது. இதனால் ஹாட் ஸ்டார்- க்கு பலத்த அடி விழுந்தது என்றே கூறலாம்.  ஐபிஎல் இலவசமாக பார்க்கும் வசதியை ஜியோ சினிமா கொண்டு வந்த நிலையில், ஹாட்ஸ்டார் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்தனர்.

அவர்கள் அனைவருமே ஜியோ சினிமாவின் சப்ஸ்கிரைப்ராக இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஜியோ சினிமா அதன் பிரீமியம் சந்தா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி, ஒரு வருடத்திற்கு ரூ.999 பிரீமியம் விலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பிரீமியம் ஹாலிவுட் நிகழ்ச்சிகளை கொண்டிருக்கும் ஒரு சந்தா திட்டம். சமீபத்தில் ஹாட்ஸ்டார் உடன் இருந்த ஒப்பந்தத்தில் இருந்து HBO நிறுவனம் வெளியேறி இப்போது ஜியோ உடன் இணைந்து HBO சீரிஸ்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. எனவே, இனிமேல், HBO நிகழ்ச்சிகளாக இருக்கும் The last of us, house of dragons, Chernobyl, white house plumbers, white lotus, mare of east town, winning time, Barry, succession, big little lies, west world, silicon valley, true detective, newsroom, game of thrones, entourage, curb your enthusiasm, Perry mason போன்ற சீரிஸ்கலை எல்லாம் பார்த்து ரசிக்கலாம்.

மேலும், ஏற்கனவே தற்போது ஜியோ சினிமா ஓடிடி தளம் மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில், HBO Content என்ற உலகளவில் மிகப்பெரியதை வாங்கியுள்ளதால், ஜியோ சினிமா பயனர்கள் இன்னும் அதிகமாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா.., கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.!

தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…

12 minutes ago

தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?

தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…

33 minutes ago

“அன்புமணி நடைப்பயணத்துக்கு தடையில்லை” – பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம்.!

சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…

57 minutes ago

சிறுமி வன்கொடுமை – வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…

1 hour ago

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…

2 hours ago

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

3 hours ago