GalaxyF54 [Image Source : samsung]
சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி எஃப்54 5ஜி (Samsung Galaxy F54 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பலவித அம்சங்களை தங்களது தயாரிப்பில் புதுப்பித்து அதனை சந்தைகளில் அறிமுகப்படுத்துகின்றன. அந்தவகையில், மக்களிடத்தில் பிரபலமான ஸ்மார்ட்போன் என்றால் அது ‘Samsung’ நிறுவனம் தயாரிக்கும் போன் என்றே சொல்லலாம்.
சாம்சங் (Samsung) நிறுவனம் மக்களின் தேவைக்கேற்ப அதன் ஸ்டைல், கேமரா போன்றவைகளில் மாற்றங்களை செய்து புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வருகிறது. முன்னதாக, சாம்சங் நிறுவனம் அதன் எஃப் சீரிஸில் கேலக்ஸி எஃப்54 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடபோவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்பொழுது சாம்சங் அதன் கேலக்ஸி எஃப்54 5ஜி (Samsung Galaxy F54 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Samsung Galaxy F54 Display:
சாம்சங் நிறுவனம் எப்பொழுதும் அதன் டிஸ்ப்ளேவில் முக்கியத்துவம் செலுத்துவது வழக்கம். அந்தவகையில், கேலக்சி F54 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் அளவுள்ள FHD+ சூப்பர் AMOLED பிளஸ் டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே நல்ல நிற மாறுபாட்டுடன் சிறந்த வண்ணங்களை உருவாக்குகிறது. இது 120Hz ரெபிரேசிங் ரேட் மற்றும் 2400 x 1080 பிக்சல்கள் தெளிவுத்திறனுடன் உள்ளது. 800நிட்ஸ் பிரகாசத்தையும் (Brightness) தருகிறது.
Samsung Galaxy F54 Processor:
கேலக்சி F54 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் எக்சைனோஸ் 1380 SoC (Exynos 1380 SoC) பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 2.4GHz வரையிலான கிளாக் ஸ்பீடுடுடன் 5G திறன் கொண்ட சிப்செட் ஆகும். இது ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் OneUI 5.1 ஐக் கொண்டுள்ளது. கேலக்சி F54 ஸ்மார்ட்போனில் பல பயன்பாடுகளை ஒரேய நேரத்தில் செயலில் வைத்திருந்தாலும் எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் நான்கு வருட OS அப்டேட்டுகள் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Samsung Galaxy F54 Camara:
கேலக்சி F54 ஆனது அதன் பின்புறத்தில் 108MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதனால் வெளிச்சம் இல்லாத இடத்தில் கூட தெளிவாக புகைப்படம் எடுக்க முடியும். பயனர்கள் தங்களை செல்ஃபி எடுப்பதற்காக 32MP கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.
Samsung Galaxy F54 Memory and Battery:
சாம்சங் கேலக்சி F54 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை நினைவகத்துடன் ரூ.29,999 விலையில் ஆன்லைனில் கிடைக்கும். இதன் நினைவகத்தை விரிவாக்கம் செய்துகொள்ளலாம். மேலும், கேலக்சி F54 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி இடம்பெறும். இதனால் அதிக நேரம் வரை ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும்.
கேலக்சி F54 வாங்கலாமா.?
சாம்சங் பிரியர்கள் இந்த ஸ்மார்ட்போனை தாராளமாக வாங்கலாம். ஆனால், 4 அல்லது 5 வருடங்கள் வரை பயன்படுத்துவோர், இந்த ஸ்மார்ட்போனை வாங்குவது குறித்து சற்று யோசிக்க வேண்டும். இந்த ஸ்மார்ட்போன் நல்ல செயல்திறன் கொண்ட பிராசஸர் மற்றும் அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி அமைப்புடன் வருவதால் அனைவரும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கும். ஆனால், இதற்கு சார்ஜர் தனியாக வாங்க வேண்டும். எனவே, சாம்சங் கேலக்சி F54 ஸ்மார்ட்போன் வாங்க விருப்பமுள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…