ஆப்கானிஸ்தான் அணிக்கு இலங்கை 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது

இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை- ஆப்கானிஸ்தான் அணி மோதியது. இப்போட்டியானது கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன் படி பேட்டிங் செய்த இலங்கை அணி 201 ரன்களை எடுத்து 36.5 ஓவரில் சுருண்டது. ஆனால் மழை குறுக்கிட்டதால் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு 187 ரன்களை ஆப்கானிஸ்தான் அணிக்கு இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது.இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.