“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!
தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவித்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனுடன் இணைந்து, இன்று கொங்கந்தான்பாறை விலக்கு பகுதியில் நடைபெறும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவித்தது குறித்த கேள்வி? பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார்.
அமைச்சர் கே.என்.நேருவின் பதில், விஜயின் அறிவிப்பு தி.மு.க.வின் தேர்தல் வாய்ப்புகளை பாதிக்காது என்று கூறி, நகைச்சுவை தொனியில் பதிலளிக்கும் வகையில் உள்ளது.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என ஜூலை 4, 2025 அன்று பனையூரில் நடந்த கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் திட்டவட்டமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.