ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சை பேச்சு! இயக்குனர் பா.ரஞ்சித்-க்கு முன்ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனையடுத்து இவர் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும் போது, மக்கள் கொண்டாடும் மன்னனை பற்றி பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில், இயக்குனர் பா.ரஞ்சித்-க்கு முன்ஜாமீன் தர அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இயக்குனர் பா.ரஞ்சித்தை புதன்கிழமை வரை கைது செய்ய மாட்டோம் என்று அரசு தரப்பு உத்தரவாதம் அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025