தமிழகத்திற்கு கனமழை..! தலைநகருக்கு..?? என்ன சொல்கிறது வானிலைமையம்

தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னை அதுவும் சிங்கார சென்னை இன்று நீருக்கு சிரமப்படுவதை #தவிக்கும் _தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் முலம் உலகமே உற்று நோக்கும் அவலம் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு அடுத்த மூன்று மாதத்திற்கு மழை கிடையாது அதுவும் சென்னைக்கு கொஞ்சம் கஷ்டம் தான் என்று கூறியது வானிலை மையம். இந்நிலையில் மக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் கனமழைக்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.சென்னையை பொருத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.மேலும் அதனோடு மட்டுமல்லாமல் வடக்கே வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தெரிவித்துள்ளது.