காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லாக்கு தூக்குவது?திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்-கே.என்.நேரு பேச்சு

காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லாக்கு தூக்குவது என்று திமுகவின் கே.என்.நேரு பேசியுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றிபெற்றது.மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிவைத்து போட்டியிட்டது.ஆனால் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடாமல் தனித்து போட்டியிட்டது.மேலும் திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சிகளும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்த நிலையில் தண்ணீர் பிரச்னையை கண்டித்து திருச்சியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திமுகவின் கே.என்.நேரு பேசினார்.அப்போது அவர் பேசுகையில், காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லாக்கு தூக்குவது? என்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று பேசினார்.இவரது பேச்சு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025