என் தளபதி தான் தூளு! கானா பாடகர் பூவையாருக்கு குவியும் பாராட்டுக்கள்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சர்க்கார் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், பிகில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின், வெறித்தனம் பாடல் நேற்று வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, நடிகர் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலாசிரியர் விவேக்கின் வரிகளை தனது சொந்த குரலில் பாடி தூள் கிளப்பியுள்ளார். விஜயுடன் இணைந்து விஜய் டிவி புகழ் பூவையாரும், தனக்குரிய பாணியில், ‘என் தளபதி தான் தூளு’ என்ற பாடல் வரியை பாடியுள்ளார். இந்த பாடலை கேட்ட பலரும் பூவையாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy that Vijay TV fame poovaiyar the young talented is a part of #verithanamsong . Best wishes. Miles to go. Keep rocking poovaiyar. Thanks @arrahman#வெறித்தனம் பாடலில் நடிகர் விஜயுடன் சேர்ந்து, விஜய் டிவி புகழ் பூவையாரும் பாடி இருக்கிறார். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். pic.twitter.com/PmKagneDJz
— Prakash PN (@mannan_prakash) September 1, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025