ரிக் இயந்திரம் வந்தவுடன் பணியை ஆரமித்திடலாம்.. தயார் நிலையில் வீரர்கள்..!

திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவனான சுர்ஜித், கால்தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை 5.40 மணியளவில் விழுந்தான்.
இவனை மீட்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 100 அடி ஆழத்தில் இருக்கும் இவனை மீட்கும் முயற்சியில் அனைத்தும் தோல்வி அடைந்ததையடுத்து, தற்பொழுது சுரங்கம் தோண்டும் இயந்திரமான ரிக் இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் வரவுள்ளது.
அந்த இயந்திரம் மூலம், அணைத்து துறை வீரர்களும் முதலில் 1 மீட்டர் அகலத்திற்கு 100 அடிக்கு குழி தோண்டப்படும். அதன்பின், திறமைவாய்ந்த 3 தீயணைப்பு வீரர்கள் தக்க பாதுகாப்பு உடைகள் அணிந்து அந்த சிறுவனை மீது கொண்டு வருவார்கள். மேலும் அந்த பணியில் ஈடுபடும் வீரர்கள் தயார் நிலையில் உள்ள நிலையில், தற்பொழுது அனைவரும் அந்த இயந்திரத்தின் வருகைக்காக காத்திருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025