இன்றைய (10.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் : மதிப்பு மரியாதை பன்மடங்கு உயரும் நாள். பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு அளிப்ப்பார்கள்
ரிஷபம் : அலைபேசி வழி எதிர்பார்த்த தகவல் வந்து சேரும் நாள். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். தொழில் ரீதியாக புதிய முதலீடுகளை செய்வீர்கள்.
மிதுனம் : சகோதர வழியில் இருந்து எதிர்பாராத வகையில் உதவிகள் குவியும் நாள் .மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும். மாற்று மருத்துவத்தால் ஆரோக்கியம் சீராகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
கடகம் : வாய்ப்புகள் வாயில் தேடி வருகின்ற நாள். வளர்ச்சியில் ஏற்பட்ட தடை அகலும். தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
சிம்மம் : வருமானமானது அதிகரித்து மனதை மகிழ்விக்கும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். மேற்கொள்ளும் பயணத்தால் அனுகூலம் உண்டு. மாற்றுக்கருத்து கொண்டோரை அனுசரித்துச் செல்வது நல்லது.
கன்னி : பிடித்தப் பொருட்களை வாங்கி மகிழும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும்.செலவுகளை சற்று நிதானத்தோடு கையாலுவது நல்லது. உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகுகின்ற நாள்.
துலாம் : வாழ்க்கையின் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலமான செய்தி ஒன்று வந்து சேரும். வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டு.
விருச்சிகம் : மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும் நாள். கடல் கடந்து பயண செய்யும் வாய்ப்பு கைகூடும். பூர்வீக சொத்துக்களில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு கிடைக் கும். வருமானம் திருப்தி தரும்.
தனுசு : ஆலய வழிபாட்டின் மூலம்ஆனந்தம் காண வேண்டிய நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்க தாமதமாகும். முடியாமல் இருந்த காரியங்கள் எப்பொழுது துரிதமாக முடிவடையும்
மகரம் : நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதி காணுவீர்கள்.எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் பணப்பற்றாக்குறையை புத்திசாலித்தனமாக சமாளிப்பீர்கள்.
கும்பம் : எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும் நாள். கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு தக்க பலன் கிடைக்கும். மாற்று மருத்து வத்தால்ஆரோக்கியம் சீராகும்.
மீனம் : இன்று உங்களை விட்டு பொல்லாதவர்கள் விலகும் நாள். உடல் நலம் சீராகி உற்சாகமாக செயல்படுவீர்கள்.சுறுப்புத்தனம் மேலும் அதிகரிக்கும்.மனதிற்கு இனிய சம்பவம் ஆனது நடைபெறும் நாளாக இந்த நாள் அமைகியும்.