விழுப்புரத்தில் எரித்துக்கொல்லப்பட்ட சிறுமி ! ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் ஆணை

விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற ஊரில் ஜெயபால் என்பவரின் மகள் ஜெயஸ்ரீயை அதிமுக கிளை செயலாளர் கலியபெருமாள் மற்றும் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் தீவைத்து கொளுத்தினர்.பலத்த காயங்களுடன் ஜெயஸ்ரீ முண்டியப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அதிமுக கிளை செயலாளர் கலியபெருமாள் மற்றும் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அரசியல் கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் உரிமைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு ஆணை பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025