டெல்லியில் இன்று மட்டும் 406 பேருக்கு கொரோனா.! 13 பேர் உயிரிழப்பு.!

டெல்லியில் இன்று மட்டும் 406 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இதுவரை மொத்தம் எண்ணிக்கை 7639 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸில் இருந்து 22,455 பேர் குணமடைந்து உள்ளார்கள். நாட்டிலேயே அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக 4 வது இடத்தில் இருக்கும் டெல்லியில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,233 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 73 ஆகவும் உள்ளது. கொரோனாவில் இருந்து 2129 குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இந்நிலையில், டெல்லியில் இன்று மட்டும் 406 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 7639 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனவால் இன்று 13 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் இதுவரை பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து இன்று 383 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 2512 பேர் குணமடைந்துள்ளார். தற்போது 5,041 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.