தொடரும் ஊரடங்கு! வீடியோ கான்பரன்சிங் மூலம் மணமக்களை வாழ்த்திய உறவினர்கள்!

Default Image

வீடியோ கான்பரன்சிங் மூலம் மணமக்களை வாழ்த்திய உறவினர்கள்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,  தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு நாட்களில் திருமண ஏற்பாடு செய்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் சுதாவிற்கும், மதுரையை சேர்ந்த கருணாநிதி மகன் சரத்பாபுவிற்கும் கடந்த ஏப்ரல் 26ம் தேதி மதுரையில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, இவர்களது திருமணம் தள்ளிப்போன நிலையில், மேலும் கால நீட்டிப்பு ஏற்படலாம் என்று தெரிந்து மதுரையில் நடைபெற இருந்த திருமணம் மணமகள் ஊரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நேற்று பெரியகுளத்தில், மணமக்கள் மற்றும் 20 உறவினர்கள் முன்னிலையில், திருமண மண்டபத்தில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் மணமக்கள் முக கவசம் அணிந்தவாறு கலந்து கொண்டனர். 

இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம், மணமகளின் தாய்மாமன் மற்றும் உறவினர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தினர். வித்தியாசமான முறையில் நடைபெற்ற இந்த திருமணம் பார்ப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்