தேசிய விருது வென்ற இயக்குநருடன் கைக்கோர்க்கும் சூர்யா

தேசிய விருது பெற்ற இயக்குநரான பாண்டிராஜின் படத்தில் சூர்யா நடிக்க போவதாகவும், அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரை போற்று. சுதா கோங்குரா இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், ஹரியின் அருவா படத்திலும், கே. வி. ஆனந்த் இயக்கத்தில் அயன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமிட்டாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
அதனையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு குடும்ப படத்திலும் நடிக்கவுள்ளாராம். அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரும்புக்கை மாயாவி என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார்.இந்த நிலையில் தேசிய விருது விருது வென்ற பாண்டிராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025