அமைச்சர் திரு. எம். ஆர். விஜயபாஸ்கர் விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் – பன்னீர்செல்வம்.!

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி, மகள் விரைவில்பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப வேண்டும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும், பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, சிலர் மீண்டும் வந்துள்ளனர். அந்த வகையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சரான எம். ஆர். விஜயபாஸ்கருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருந்ததை அடுத்து கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவரது மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது மூன்று பேரும் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பலர் கருத்து கூறி வரும் நிலையில் தற்போது பன்னீர் செல்வம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு. எம். ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் விரைவில் பூரண நலம்பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் @OfficeofminMRV மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் விரைவில் பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 19, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025