தென் கொரியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! முழு ஊரடங்கு அமலுக்கு வருமா?

தென் கொரியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனையடுத்து, ஒவ்வொரு நாட்டு அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தினார்.
இந்நிலையில், தென் கொரியாவில், கடந்த ஒன்பது நாட்களாக தொடர்ச்சியாக மூன்று இலக்கங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிற நிலையில், நாட்டில் முழு ஊரடங்கை அறிவிக்க அரசாங்கம் இப்போது பரிசீலித்து வருகிறது.
தென் கொரியாவில் 332 புதிய கொரோனா வைரஸ் நோய்கள் பதிவாகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் இந்த முடிவினை எடுத்துள்ளது. மேலும், இந்த வாரம் தலைநகரில் தேவாலயங்கள் மூடப்பட்ட நிலையில், நைட் கிளப்புகள், பார்கள், பஃபே ரெஸ்டாரன்ட்கள் மற்றும் சைபர் கஃபேக்கள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன.