சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாவதற்கு இயக்குனர் பாரதிராஜா ஆதரவு

Default Image

சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடும் முடிவிற்கு ஆதரவாகவும், தியேட்டர்களை விரைவில் திறக்க அனுமதி கேட்டும் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இது தியேட்டர் உரிமையாளர்களுக்கு மட்டுமில்லாமல் தயாரிப்பாளருக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் பல வழிகாட்டு நெறிமுறைகளுடன் படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தியேட்டர்களை திறக்க விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ,சூரரைப்போற்று  படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவிற்கு ஆதரவாகவும் கூறி இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச்
சென்று பாராட்டுகளைப் பெற வியர்வையை மூலதனமாக்கி கடுமையாக வார்த்தைகளில் விவரிக்க முடியாது அதில் உள்ள பிரச்சினைகளை உழைக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஒரு திரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை பட்டியலிடத் தேவையில்லை. மனசாட்சி உள்ள அனைவருக்கும்
தெரியும்.

ஒருவரை ஒருவர் குற்றம் சாற்றிக்கொண்டு தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களை இழந்தது தான் மிச்சம். எல்லாவற்றிக்கும் நாம் தான் காரணம் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள்தான்.பாதிக்கப்பட்ட தயாரிப்பளார்களுக்கு கிடைத்த மாற்று வழிதான். வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்று தளங்களை தவிர்க்க முடியாது. வேண்டாம் என்றாலும் காலப்போக்கில் நாமும் அந்த இடத்துக்குத் தள்ளப்படுவோம். இதற்கு நாம் கடந்த காலங்களில் video piracy க்கு எதிரான போராட்டம், தனியார் தொலைக்காட்சிகளுக்கு எதிரானபோராட்டம், கேபிள் க்கு எதிரானபோராட்டம், DTH க்கு எதிரானபோராட்டம் சொல்லி கொண்டே போகலாம் .

இறுதியில் எல்லாவற்றையும் வாசல் வழியே நம் வரவேற்றுக் கொண்டதே நிதர்சனம் என் பார்வையில் தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சினை தியேட்டரில் டிக்கெட் விலையை விட  விலை அதிகம் .ஒருசாமானிய மனிதன் எப்படி ஆயிரம் , இரண்டாயிரம் கொடுத்து குடும்பத்துடன் தியேட்டருக்கு வர முடியும் அதனால்தான் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதள அயோக்கியர்களை நோக்கி மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் நாமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.

இந்த கொரோனா கால கட்டத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இயக்குனர்கள், தொழில்துட்ப கலைஞர்கள், பெப்சி தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவரும் ஐந்து மாதமாக வேலையின்றி எவ்வளவு பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளோம் என்பதை அனைவரும் அறிவோம் .

இப்போதுதான் மத்திய அரசுபடப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார்கள், தியேட்டர்
திறக்க  தமிழக முதல்வர் மாண்புமிகு திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.  அவர் மத்திய அரசுடன் கலத்து ஆலோசித்துவிட்டு விரைவில் சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டர் திறக்க அனுமதி அளிப்பார்கள் என்று நம்புகிறோம். ஆனால் அதற்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் ,விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து எதிர்நோக்க இருக்கும் சில பிரச்சனைகளை பேசி திர்ப்பது நன்றாக இருக்கும் என கருதுகிறேன் . குறிப்பாக மக்கள் நலனில் அக்கறை கொண்டு தியேட்டரில் 35% முதல் 50% க்குள் சமூக இடைவெளியுடன் தியேட்டரில் மக்கள் அனுமதி வேண்டும் என அரசு உத்தரவு இருக்கும்.

50சதவீத மக்களை அனுமதித்தால் கூட ஒரு திரைப்படம் தியேட்டரில் எத்தனைவாரங்கள் திரையிடப்படும். ஏற்கனேவே நல்ல திரைப்படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. அப்படியே தியேட்டர் கிடைத்தாலும் முதல் இரண்டு வாரத்தில் தூக்கி விடுவார்கள் .குறைந்தது ஒரு திரைப்படம் வெளியாகி நான்கு வாரங்கள் தியேட்டரில்திரையிடப்பட வேண்டும் பின் தயாரிப்பாளர், திரையரங்க உரிமையாளருக்கும் டிக்கெட் விலையில் உள்ள சதவிதம் இன்றய சூழ்நிலையில் மாற்றி அமைக்க வேண்டும்.

தயாரிப்பாளர்களின் நீண்ட  நாள் கோரிக்கையான
தொகை திரைப்படம் வெளியாகும் சமயத்தில் பெரும் சுமையாக இருக்கிறது .இதை vpf சேவை வழங்கும் நிறுவனங்களும் . தியேட்டரிமையாளர்களும் பேசி தீர்த்து கொண்டு எங்களுக்கான சுமையை கருத்தில் கொண்டு முன்வரவேண்டும். தயாரிப்பாளர்களின் மற்றொரு கோரிக்கையான டிக்கெட் விற்பனையா தயாரிப்பார்கள் அறிந்து கொள்ளும் வகையில் தியேட்டரி டிக்கெட் விற்பனை இணையத்தளம்  கொண்டு டிஜிட்டல்  மயமாக்க வேண்டும் எடுத்து முடிக்கப்பட்டு திரைக்கு வராமல் பல திரைப்படங்கள் முடிக்கப்பட்டு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எடுக்கப்பட்ட திரைப்படங்கள் திரைக்க வந்தால் தான் அடுத்தடுத்து அது தயாரிப்பாளர் படம் எடுக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

ஆகையால் தமிழ் திரைத்துறை நலிந்து கொண்டிருப்பதற்கான காரணங்கள் அலசி ஆராயப்பட வேண்டும். உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் தயாரிப்பாளர்களை வாழ வழி செய்ய வேண்டும் என்பதே சரியாக இருக்கும் .சிறப்பா இருக்கும் பிரச்சனைகள்  இப்படி இருக்க அதைவிடுத்து. பிரச்சனை வேறு பக்கம் திருப்புவது சரியாக தோன்றவில்லை .சில நாட்களில் ottக்கு எதிரான பிரச்சனையை   திரு.சூர்யாவிற்கு  எதிரான தனி நபர் பிரச்சனையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளதுஎன்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். திரைப்படத்தில் சம்பபதித்து திரைத்துறையில் முதலீடு செய்வது ஒரு சிலரே அதில் சூர்யாவும் ஒருவர் .கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் படத்தை காண Ott சிறந்த தளமாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தில் சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க உரியதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war