நீட் விவகாரத்தில் தி.மு.க.வின் யோசனையை அரசு ஏற்கத் தயார் – அமைச்சர் விஜயபாஸ்கர்

திமுக அதற்கான வழிகளை கூறினால் இப்போதே தமிழக அரசு செய்ய தயார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று 2-வது நாளாக சட்டப் பேரவை தொடங்கியது. பேரவையில் ,நீட் தேர்வு மனஅழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது,தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் . நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் கூறினார்.
எனவே சட்டப்பேரவையில் நீட் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக இடையே காரசாரமாக நடைபெற்றது.அப்பொழுது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,நீட் விவகாரத்தில் திமுகவின் யோசனையை அரசு ஏற்க தயார். 8 மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறுகிறீர்கள்,எப்படி நீங்கள் ரத்து செய்வீர்கள் என்ற வழியை சொல்லுங்கள்? என்று கேள்வி எழுப்பினார்.மேலும் திமுக அதற்கான வழிகளை கூறினால் இப்போதே தமிழக அரசு செய்ய தயார் என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025