பழமையும், பன்முகத்தன்மையும் இந்தியக் கலாச்சாரத்தின் அடிநாதம் -கமல் ட்வீட்

பழமையும், பன்முகத்தன்மையும் இந்தியக் கலாச்சாரத்தின் அடிநாதம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மத்திய அரசு இந்தியாவின் தோற்றம், பரிணாமம், வளர்ச்சி குறித்து வரலாறு எழுத 16 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவில் தென்னிந்தியாவிலிருந்து ஒரு ஆய்வாளர், அறிஞருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.இதற்கு தென்னிந்தியாவை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பழமையும், பன்முகத்தன்மையும் இந்தியக் கலாச்சாரத்தின் அடிநாதம். 12000 வருடப் பாரம்பரியத்தின் வளர்ச்சியை ஆராய அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவில் பன்முகத்தன்மை பிரதிபலிக்காதது வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி.தென்னிந்தியர்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இன்றி இந்திய சரித்திரம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியர்கள், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் இன்றி இந்திய சரித்திரம் கிடையாது. (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) September 28, 2020