பயன்பாட்டுக்கு வந்தது முதல் கொரோனா தடுப்பூசி.. முதல் ஆளாக போட்டுக்கொண்ட 90 வயது மூதாட்டி!

ஃபைசர் – பயோன்டெக் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்திற்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், முதல் முதலாக 90 வயது மூதாட்டிக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நாடுகள் தீவிர முயற்சியில் களமிறங்கியுள்ளது. அந்தவகையில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் அமெரிக்காவின் ஃபைசர் – பயோன்டெக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுவந்தது. அந்த தடுப்பு மருந்து 95 சதவீதம் பயனளிப்பதாக அறிவித்ததை தொடர்ந்து, அந்த தடுப்பு மருந்திற்கு பிரிட்டன் நாடு அரசு அனுமதி வழங்கி, இன்னும் ஒரு சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த தடுப்பூசியை போடும் பணி பிரிட்டனில் தற்பொழுது தொடங்கியது. இந்த தடுப்பூசியை முதற்கட்டமாக முன்களப் பணியாளர்கள், முதியவர்களுக்கு போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 90 வயது மூதாட்டிக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025