மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்..!

நாடு முழுவதும் வருகின்ற 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசி முதல்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இதற்காக தடுப்பூசி இன்று அனுப்பி வைக்கப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று விசாரணை நடத்தியது.
அப்போது வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா…? என மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் காணொளி மூலம் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட், கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025