மாஸ்டர் படத்தின் முதல் காட்சியை தியேட்டரில் கண்டு களித்தேன்! – கீர்த்தி சுரேஷ்

மாஸ்டர் படத்தின் முதல் கட்சியை தியேட்டரில் சென்று கண்டுகளித்தேன். ஓராண்டிற்கு பின் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த அனுபவம் பற்றி வார்த்தைகளால் கூற முடியாது.
நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபலமான இந்தியா நடிகையாவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, பல பிரபலங்களுடன் இணைந்து திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் முதல் காட்சியை திரையரங்கில் சென்று பார்த்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், மாஸ்டர் படத்தின் முதல் கட்சியை தியேட்டரில் சென்று கண்டுகளித்தேன். ஓராண்டிற்கு பின் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த அனுபவம் பற்றி வார்த்தைகளால் கூற முடியாது.’ என பதிவிட்டுள்ளார். இவர் சர்க்கார், பைரவா படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.