#Breaking: மனைவிக்கு கொரோனா.. தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

தனது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
டெல்லியில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 23,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் இரண்டாம் அலையில் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 28, 2025