#BREAKING: ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி.!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். அதில், லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, ராகுல் காந்தி மேற்கு வங்கம் சென்று ஒரு நாள் முழுவதும் தொடர்ச்சியாக பரப்புரையில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பரப்புரையை கைவிட்டுள்ளேன் என்றும் இதை அனைத்து அரசியல் கட்சிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் ராகுல் காந்திக்கும் கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தேவையான மருத்துவ வசதிகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
After experiencing mild symptoms, I’ve just tested positive for COVID.
All those who’ve been in contact with me recently, please follow all safety protocols and stay safe.
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
July 18, 2025
“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
July 18, 2025
ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!
July 18, 2025