ஒடிசாவில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல் – எவற்றிற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

ஒடிசாவில் இன்று முதல் வருகின்ற 19ஆம் தேதி வரையில் 14 நாட்களுக்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள கொரோனாவின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அந்த மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்குகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அம்மாநில அரசு இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்பொழுது இன்று காலை 5 மணி முதல் வருகிற மே 19ஆம் தேதி வரையிலும் ஒடிசாவில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி அங்கு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் மளிகை கடைகள் இறைச்சி கடைகள் மட்டும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி அனைத்து விளையாட்டு மைதானங்கள், தியேட்டர்கள், வழிபாட்டுத்தலங்கள், மால்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே பேருந்தில் பயணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் திருமணம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும் 50 பேர் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ளலாம் எனவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025