தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா…. புதியதாக 22,651 பேர் பாதிப்பு….463 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 22,651 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்…
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22,651 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,95,402 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1,971 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 463 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26,128 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 33,646 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையிலும் 19,00,306 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,75,033 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,83,71,312 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 2,68,968 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!
June 20, 2025
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025