#BREAKING: பொறியியல் சேர்க்கை -ரேண்டம் எண் வெளியீடு..!

பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் இன்று ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றது. நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கை இணையதளம் மூலமாக கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கிய நேற்று நிறைவு பெற்றது.
பதிவு தொடங்கிய முதல் நாள் 25,874 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கடைசி நாளான நேற்று வரை 1,74, 171 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 1,60,834 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி, நடப்பாண்டில் 13,000-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இணையதளத்தை பார்த்து தங்களுக்கான ரேண்டம் எண்களை அறிந்து கொள்ளலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025