ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகம் எல்லைகள் அறிவிப்பு..!

புதியதாக அமையும் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகத்தில் இடம்பெறும் காவல் நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் 104 காவல் நிலையங்கள் இடம்பெறும். புதியதாக அமையும் ஆவடிகாவல் ஆணையரகத்தின் கீழ் 25 காவல் நிலையங்கள் இடம்பெறுகின்றன. தாம்பரம் ஆணையரகத்தின் கீழ் 20 காவல் நிலையங்கள் இடம்பெறும். 3 காவல் ஆணையரகத்துக்குட்பட்ட காவல் நிலையங்களின் பட்டியலை டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெள்ளவேடு, செவ்வாப்பேட்டை, சோழவரம், மீஞ்சூர், காட்டூர் ஆவடி காவல் ஆணையரகத்தில் சேர்ப்பு, காஞ்சிபுரத்தில் அடங்கிய சோமங்கலம், மணிமங்கலம் காவல் நிலையங்களும் தாம்பரத்தில் இடம்பெறும். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், தாழம்பூர், கோளம்பாக்கம் தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் சேர்ப்பு.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025