குமரியில் மண்சரிவு – ரயில்கள் சேவைகள் முழுமையாக ரத்து..!

குமரியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதை சீரமைக்கும் பணி நடந்து வருவதால் 4 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்லம்-திருவனந்தபுரம் தினசரி விரைவுரயில் (06425) சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில் -திருவனந்தபுரம் விரைவுரயில்(06426) சேவை இன்று முழுமையாக ரத்து செய்கிறது. அதே போல திருவனந்தபுரம் – நாகர்கோவில் விரைவு ரயில் இன்று (06427) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் -நாகர்கோவில் விரைவு இரயில் (06435) சேவையின் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025