நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் பட குழுவினரை பாராட்டிய நல்லகண்ணு..! புகைப்படம் உள்ளே..!

இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள், நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம். இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நடிகர் சூர்யா அவர்கள் இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டு ரசித்த நிலையில், படக்குழுவுக்கும் முதல்வர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள், நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பீம் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா மற்றும் ஜெய் பட குழுவினரை பாராட்டிய நல்லகண்ணு..! #nallakannu #Jaibhim pic.twitter.com/PtT8UpWGfa
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) November 26, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இறுதிப்போட்டியை நோக்கி பயணம்.., நாளை குவாலிஃபயர் 2 சுற்றில் பஞ்சாப்பை வீழ்த்துமா மும்பை.!
May 31, 2025
கேரளாவில் ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை!! கனமழையால் 10 பேர் உயிரிழப்பு.., விரைந்தது NDRF குழு.!
May 31, 2025