மோடி அரசின் நயவஞ்சகத்திற்கு எதிரான போராட்டத்தில் மற்றுமொரு மகத்தான வெற்றி – ஜோதிமணி எம்.பி

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டை உறுதிசெய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன் என ஜோதிமணி எம்.பி ட்வீட்.
முந்தைய அதிமுக ஆட்சியின் போது, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் எனத் தீர்ப்பளித்தனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டை உறுதிசெய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன். தமிழக மாணவர்களுக்கு எதிரான மோடி அரசின் நயவஞ்சகத்திற்கு எதிரான போராட்டத்தில் மற்றுமொரு மகத்தான வெற்றி!’ என பதிவிட்டுள்ளார்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டை உறுதிசெய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்.
தமிழக மாணவர்களுக்கு எதிரான மோடி அரசின் நயவஞ்சகத்திற்கு எதிரான போராட்டத்தில் மற்றுமொரு மகத்தான வெற்றி!— Jothimani (@jothims) April 7, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025