இம்ரான் கானை இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆஜர்படுத்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை ஒரு மணி நேரத்தில் ஆஜர்படுத்த உத்தரவு.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது செய்யப்பட்டது முற்றிலும் சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எனவே, கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்னும் ஒரு மணி நேரத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 9-ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அதிரடியாக கைது செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ரூ.53 கோடி மதிப்புள்ள நிலத்தை தனது அறக்கட்டளைக்கு மாற்றிய புகார் தொடர்பான வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியிருந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025