காங்கிரஸ் 115 இடங்களில் முன்னிலை! வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றார் சித்தராமையா!

Siddaramaiah (1)

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை.

கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது. ஆரம்ப முதலே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சராவர் என எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா வீட்டில் இருந்து புறப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றுள்ளார். கர்நாடக தேர்தலில் மைசூர் மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியில் முதலமைச்சர் சித்தராமையா முன்னிலை வகித்து வருகிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தாராமையா, தனது கட்சி கர்நாடகாவில் ஆரம்ப கட்டத்திலேயே பாதிக் கட்டத்தை நெருங்கிவிட்டதால் தம்ஸ் அப் தெரிவித்துள்ளார். இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி காங்கிரஸ் கட்சி 115 இடங்களில் முன்னிலை பெற்று நிலையில், பாஜக 73 இடங்களிலும், மஜத 29 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. எனவே, கர்நாடகாவில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்