உத்தரபிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.!!

UP VoteCount

உத்தரபிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

உத்தரபிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மே 4 மற்றும் மே 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவு மே 4ஆம் தேதி 37 மாவட்டங்களிலும், 2ஆம் கட்டமாக 38 மாவட்டங்களுக்கு மே 11ஆம் தேதியும் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது.  இந்த தேர்தலில் 17 மாநகராட்சிகளில் உள்ள மேயர்கள் மற்றும் கார்ப்பரேட்டர்கள் மற்றும் நகர் பாலிகா பரிஷத்கள் மற்றும் நகர் பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இன்று முடிவடைகிறது.

மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) நகர்ப்புற உள்ளாட்சியில் தனது  ஆதிக்கத்தைத் தொடரும் என்று நம்புகிறது, அதே நேரத்தில் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி (BSP) மற்றும் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் இழந்த இடத்தை மீண்டும் பெற விரும்புகின்றன.

வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது என தகவல்கள் கிடைத்துள்ளது. 14,522 பதவிகளுக்கு 83,378 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டு கட்டங்களிலும் சுமார் 53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்